ஏப்.6ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

by Editor / 26-03-2025 12:41:19pm
ஏப்.6ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ராமேஸ்வரத்தில் பேட்டி அளித்துள்ளார். வரும் 5ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகை தர இருக்கிறார். தொடர்ந்து, ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

 

Tags :

Share via