ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு

by Editor / 29-04-2025 05:28:59pm
ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் கடற்கரையில் சடலமாக மீட்பு

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தை சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (21). இவர் கனடாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். ஏப்.25ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே செல்வதாக கூறி விட்டுச் சென்ற வன்ஷிகா, 4 நாட்களுக்குப் பிறகு கடற்கரை அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via