வீடு, மனை விற்பனை ரியல் எஸ்டேட் ஆணையம்.உத்தரவு.

by Staff / 30-07-2025 03:13:44pm
வீடு, மனை விற்பனை  ரியல் எஸ்டேட் ஆணையம்.உத்தரவு.

வீடு, மனை விற்பனை தொடர்பான குறிப்பேடுகள், ஆவணங்களில் தெரிவிக்கப்படும் சலுகைகள் அருகில், மிக சிறிய எழுத்துகளில், 'நிபந்தனைகளுக்கு உட்பட்டது' என்ற வாசகம் இடம் பெறுகிறது.இந்த வாசகத்தை தவறாக பயன்படுத்தி, சில நிறுவனங்கள் கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.இதன் அடிப்படையில், வீடு, மனை விற்பனையில், எந்த இடத்திலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற வாசகம் இனி இடம் பெறக்கூடாது என, ரியல் எஸ்டேட் ஆணையம்.உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.

 

Tags : வீடு, மனை விற்பனை ரியல் எஸ்டேட் ஆணையம்.உத்தரவு.

Share via