சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

by Staff / 17-09-2025 09:55:51am
சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கரூர் மாவட்டத்தில் இன்று (செப்.17) திமுகவின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக 2 லட்சம் பேர் வரை பங்கேற்கும் வகையில், 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நபர்களுக்கு நற்சான்று மற்றும் பணமுடிப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

 

Tags : சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Share via