சிரியாவின் இடைக்கால அதிபர்  அகமது அல்-ஷரா அமெரிக்காவிற்கு  அரசு முறை பயணம்

by Admin / 10-11-2025 08:25:25pm
சிரியாவின் இடைக்கால அதிபர்  அகமது அல்-ஷரா அமெரிக்காவிற்கு  அரசு முறை பயணம்

சிரியாவின் இடைக்கால அதிபர்  அகமது அல்-ஷரா அமெரிக்காவிற்கு  அரசு முறை பயணம் மேற் கொண்டுள்ளார். அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் அவரை இன்று (நவம்பர் 10, 2025) வெள்ளை மாளிகையில் வரவேற்றார். சிரியா.1946 இல் சுதந்திரம் பெற்ற பிறகு, சிரிய நாட்டின் தலைவர் ஒருவர் அமெரிக்காவிற்குச் செல்லுவது இதுவே முறையாகும்.. இது ஒரு வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது..ராணுவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றது இரு நாடுகளின் உறவில் ஒரு முக்கியமான மாற்றம் ஆகும்.இச்சந்திப்பிற்கு  முன்னோட்டமாக,  அமெரிக்கா  சமீபத்தில்  அகமது  அல்-ஷராவின்  மீதான பயங்கரவாதத் தடைகளை  நீக்கியது  குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via