ஆந்திரா பிரதேசத்தின் தலைநகராக அமராவதி-இன்று மக்களவையில்மறுசீரமைப்பு திருத்த மசோதா.
இன்று மக்களவையில் ஆந்திரா பிரதேசத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கான ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2014 ஆம் ஆண்டின் ஆந்திர பிரதேச மறு சீரமைப்பு சட்டத்தின் பிரிவு-5 திருத்தம் மேற்கொண்டு ஆந்திர பிரதேசத்திற்கு புதிய தலைநகரம் அமைக்கப்படும் என்ற வாசகத்திற்கு பதிலாக அமராவதியை புதிய தலைநகராக இருக்கும் என்று மாற்றப்பட உள்ளது. முன்னதாக மார்ச் 28, 2026 அன்று அமராவதியை ஆந்திராவில் நிரந்தர மற்றும் ஒரே தலைநகராக அங்கீகரிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ஆந்திர மாநில சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 2, 2024 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும் வகையில் முன்மொழிக்கப்பட்டுள்ளது .இன்றைய தினமே தெலுங்கானா மற்றும் ஆந்திராவைக்கு இடையிலான பத்து ஆண்டுகால பொதுவான தலைநகர் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இதன் மூலம் அமராவதியின் தலைநகர் அந்தஸ்திற்கு சட்டபூர்வ பாதுகாப்பு வழங்கப்படுவதோடு கடந்த காலங்களில் நிலவிய மூன்று தலை நகரங்கள் போன்ற குழப்பங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும்.
Tags :



















