திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு

by Staff / 12-08-2023 01:26:38pm
திமுக பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற 3வது வார்டு கவுன்சிலராக பொறுப்பில் இருப்பவர் திமுகவை சேர்ந்த சித்ரா. இவர் அவ்வை நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் திமுக பெண் கவுன்சிலர் சித்ரா, கணவர் ரவி, மற்றும் மகன் என 3 பேரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளது. இதில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via