தமிழக அரசியல் களத்தில் புதிய சூடு பிடித்து உள்ளது.
தமிழக அரசியல் களத்தில் புதிய சூடு பிடித்து உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சி.வி .சண்முகம், எஸ்.பி. வேலுமணி புதிய அணியாக 25 பேர் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தனித்து இயங்கி, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்தது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்த அனைவருடைய அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அந்த இடத்திற்கு வேறு நபர்களை நியமித்தார். பெரும்பான்மை ஆதரவு பெற்ற நிலையில் த.வெ. க ஆட்சி தங்களுக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, இந்திய முஸ்லிம்கள் கட்சி ஆகியவற்றிற்கு அமைச்சர் பதவி வழங்கியதோடு ,தங்கள் கட்சியை சேர்ந்த 16 பேருக்கும் அமைச்சர் பதவி வழங்கி, கிட்டத்தட்ட 35 அமைச்சர்களை நியமித்து, இனி அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்கிற நிலையை உருவாக்கிய ,பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறிய சி.வி. சண்முகம்., எஸ்.பி வேலுமணி அணியினர் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொருவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கேபி முனுசாமி ஆகியோரை சந்தித்து மீண்டும் தங்களுடைய ஆதரவை நல்கினர். இதனைத் தொடர்ந்து 5 அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திடீரென்று தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கி, தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.இதன் மூலம் நான்கு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்படலாம். இரண்டு பக்கமும் கதவு அடைக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு தனித்த நிலைப்பாட்டில் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்று கூறிய குழுவினர் தவிப்புடன் உள்ளனர்.
Tags :


















