விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை- குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை

by Admin / 25-05-2026 11:59:02pm
விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை- குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

 கடந்த மார்ச் 10 அன்று விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ப்ளஸ் டூ மாணவி இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது மர்மமான முறையில் காணாமல் போனார் மறுநாள் காலை வேட்டின் அருகே உள்ள முட்பகுதியில் கழுத்து நெறிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார் இச்சம்பவம் குறித்து காவல்துறை போக் சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. குற்றவாளியை பிடிக்க காவல்துறையினரால் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது காற்றாலை கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்தும் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார் மார்ச் 19 அன்று ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். தர்ம முனீஸ்வரன் மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில் 65 முதாட்டியையும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்க பெற்று ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், இந்த குற்றத்தை அரங்கேற்றி உள்ளது தெரிய வந்தது.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் 76 நாட்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று நீதிபதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் முனீஸ்வரன் குற்றவாளி என அறிவித்து இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via
Logo