அதிமுக 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா

by Admin / 26-05-2026 12:25:20am
அதிமுக 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா

அதிமுக 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற எஸ் ஜெயக்குமார் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி சத்தியபாமா இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் கே சி டி பிரபாகரை நேரில் சந்தித்து தங்களின் ராஜரமா கடிதங்களை அளித்தனர். அவர்களின் ராஜினாமா கடிதம் கிளை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அவர்கள் மூவரும் ராஜனாமா செய்த சிறிது நேரத்திலேயே தலைமைச் செயலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்கள் மூவருக்கும் தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் என் ஆனந்த் உறுப்பினர் கார்டை வழங்கினார். கட்சி  தாவல் சட்டத்தின் கீழ் பகுதி நீக்கம் செய்யப்படுவதை தவிர்க்கவே அவர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல். இம்மூபெரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 44 ஆக குறைந்துள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த மூவர் மீண்டும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக நிறுத்தப்படலாம். 

 

Tags :

Share via
Logo