அமெரிக்கா- ஈரான்அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

by Admin / 15-06-2026 01:57:47am
அமெரிக்கா- ஈரான்அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா- ஈரான்  தற்காலிக போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை அடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகவழியான ஹோா்முஸ்நீரிணைமீண்டும் திறக்கப்பட்டு அனைத்து கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் . அணு ஆயுதங்களை உருவாக்குவோ வாங்கவோ ஈரான் எந்த வடிவத்திலும் முயலக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரோனியத்தை அமெரிக்காவின் போா் விமானங்கள் மூலம் வெளியே எடுத்து அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் அல்லது நிதிகள் எதுவும் உடனடியாக விடுவிக்கப்படாது என்றும் அமெரிக்கா தன் கருத்தை வெளிப்படுத்தி உள்ளது .இந்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகும் என  குறிப்பிட்ட தேதியை ஈரான் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இறுதி ஒப்பந்தத்திற்கான வரைவு என்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும் உடனடி போர் நிறுத்தம் என்பது ட்ரம்பின் சொந்த கணிப்பு மட்டுமே என்றும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை என்றும் அணு ஆயுதக் கொள்கை முழுமையாக மாறாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் இரு நாடுகளிலும் முறைப்படியாக கையெழுத்திடப்பட்டால் அடுத்த 60 நாள்க்கான தற்காலிக போர் நிறுத்தம் செயல்படுத்தப்படும் என்றும் அதன் பின்னர்  பேச்சு வார்த்தைகள் தொடரும் என்றும் கருத்து நிலவுகிறது.

 

Tags :

Share via
Logo