2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்றதால், குழு நிலைகளின் முடிவில் 32 அணிகள் இந்த புதிய நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
அமெரிக்கா - போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அமெரிக்க ஆண்கள் தேசிய அணி, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி , காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குக முன்னேறியது.சுவீடனை எளிதாகத் தோற்கடித்து, பிரான்ஸ் தொடரில் தனது வலுவான பயணத்தைத் தொடர்ந்தது. செனகலுக்கு எதிராக ஒரு வியத்தகு மீள் எழுச்சியை நிகழ்த்திய பெல்ஜியம், இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது. அதே வேளையில், ஈக்வடாரை மெக்சிகோ வீழ்த்தியது .மெக்சிகோவின் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் கொண்டாட்டங்களின் போது, மூச்சுத்திணறல் காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக மெக்சிகோ நகர அதிகாரிகள் தெரிவித்தனர்'ரவுண்ட் ஆஃப் 32' நாக்-அவுட் சுற்றில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில முக்கியப் போட்டிகள்:பிரேசில்- ஜப்பான்போர்ச்சுகல் - குரோஷியாஜெர்மனி - பராகுவேஅமெரிக்கா- போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாஇனிவரும் போட்டிகள் அனைத்தும் தோற்றால் வெளியேற வேண்டும்என்ற அடிப்படையில் அமைந்திருப்பதால் ஆட்டங்கள் கூடுதல் விறுவிறுப்பை எட்டியுள்ளன. இந்த நாக்-அவுட் தொடர் ஜூலை 19 அன்று நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.
Tags :


















