16வயது சிறுமியை காரப்பமாக்கி கருகலைப்பு மூன்று பேர் கைது

ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 18வயது பூர்த்தி அடையாத சிறுவன்(17) அரசு பள்ளியில் படித்து வந்த 16வயது சிறுமியிடம் பழகி வந்த நிலையில் சிறுமியிடம் தவறான உறவில் ஈடுபட்டதால் சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து சிறுவனின் உறவினரான திமுகவை சேர்ந்த கிளாம்பாடி பேரூராட்சி தலைவர் அமுதாள் உதவியுடன் சிறுவனின் பெற்றோர் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருகலைப்பு செய்ய முயன்றுள்ளனர். இதற்கு தனியார் மருத்துவமனை மறுப்பு தெரிவித்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் மலையம்பாளையம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சிறுவனின் பெற்றோரான கெளரி, விஜயன் மற்றும் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் அமுதாள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவகாமி மற்றும் சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். 16வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவத்தில் பேரூராட்சி தலைவர் உட்பட சிறுவனின் பெற்றோர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :