முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கைது.
இன்று சென்னை அமைந்தகரையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது. தனியார். பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார அனுமதிக்காக 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக லஞ்சம் வசூலித்ததாக எழுந்த புகான்ரி கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கூறியதை அடுத்து இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ததோடு கைது செய்வதற்கு தடை இல்லை என்று கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :


















