3 லோக்சபா, 30 சட்டசபை  தொகுதிகளுக்கு அக்.,30ல் இடைத்தேர்தல்

by Editor / 28-09-2021 04:47:30pm
3 லோக்சபா, 30 சட்டசபை  தொகுதிகளுக்கு அக்.,30ல் இடைத்தேர்தல்


 3 லோக்சபா தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்.,30ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவ.,2ல் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கோவிட் சூழல், பண்டிகை காலங்கள் மற்றும் குளிர் காலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனைக்கு பிறகும், அனைத்து சூழ்நிலைகளை ஆய்வு செய்த பின்னர், டாமர் டியூ மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி, ம.பி., ஹிமாச்சல்லில் காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 30 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்., 30 ம் தேதி தேர்தல் நடக்கும். நவ.,2ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via