போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் கைது: ஷாருக்கான் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்த சல்மான் கான்...

போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது வீட்டுக்கு சல்மான் கான் சென்றுள்ளார்.
இந்தியாவின் உல்லாசக் கப்பலான எம்பிரஸ் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் பார்ட்டி நடக்க இருப்பதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த கப்பலில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக் குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் பயணிகளோடு பயணிகளாக ஏறினர்.
அப்போது, போதை பார்ட்டியில் கலந்துகொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர்களிடம் அவர்கள் விசாரனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து சுமார் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆர்யன் கான் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை இன்று வரை காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் அவர்கள் இன்று ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்பெயினில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஷாருக்கான் இந்தியா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், நேற்றிரவு திடீரென ஷாருக்கான் வீட்டுக்குச் சென்றார். ஆர்யன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஷாருக் வீட்டுக்கு சென்றது என்ன நடந்தது என விசாரித்தார்.
Tags :