பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து  ஜியோ நெட்வொர்க்கிலும்  கோளாறு

by Editor / 06-10-2021 07:44:09pm
பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து  ஜியோ நெட்வொர்க்கிலும்  கோளாறு

ஜியோ பயனர்கள் நெட்வொர்க் சிக்கல்களை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர். கால் டிராப் ஏற்படுவதாகவும், இணையதள சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  ஒரு சில ஜியோ பயனர்கள் ஜியோவின் பிராட்பேண்ட் இணைப்பும் வேகம் குறைந்துவிட்டதாக தெரிவித்தனர்.


ஆயிரக்கணக்கான ஜியோ பயனர்கள் தற்போது சில நெட்வொர்க் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளது. இந்த நெட்வொர்க் பிரச்சினை மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் இன்னும் சில நகரங்களில் உள்ள பயனர்களுக்கு இருப்பதாக தெரிகிறது.


இந்த நிலையில் பயனர்கள் புகார்களுக்கு பதிலளித்த ஜியோ நிறுவனம், இடையூறுக்கு வருந்துவதாகவும், இந்த பிரச்சினைகள் தற்காலிகமானது என்றும் விரைந்து சரி செய்ய பணியாற்றுவதாகவும் தெரிவித்து உள்ளது.

 

Tags :

Share via

More stories