நவராத்திரி உடை கட்டுப்பாடு : யூனியன் வங்கி சுற்றறிக்கை

by Editor / 10-10-2021 10:32:50am
நவராத்திரி உடை கட்டுப்பாடு :   யூனியன் வங்கி சுற்றறிக்கை

நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் ஒவ்வொரு வண்ணத்தில் உடை அணிந்து வர வேண்டும் என்றும் அப்படி அணியாவிட்டால் , ரூ .200 அபராதம் விதிக்கப்படும் என்றும் ' யூனியன் பாங்க் ஆப் இந்தியா ' தனது ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது .

இதுகுறித்து மதுரை எம் . பி ., சு . வெங்கடேசன் ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார் . அதில் , ' யூனியன் பாங்க் ஆப் இந்தியா ' மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் ஏ . ஆர் . ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை கடந்த 1- ம் தேதி அன்று வெளியிட்டுள்ளார் .

யார் இவருக்கு அதிகாரம் தந்தது ? ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் , இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார் என்று சு.வெங்கடேசன் எம்.பி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

நம்பிக்கை உள்ளவர்கள் நவராத்திரியை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள், அது அவர்கள் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல் என்று கடுமையாக தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும். சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சுற்றறிக்கையை வங்கி அதிகாரிகள் திரும்ப பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via