நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு

by Editor / 10-10-2021 04:44:33pm
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பு

நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் நிலக்கரி விலை உயர்ந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.

அக்டோபர் 4ம் தேதி கணக்குப்படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேச ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் நிலக்கரி பற்றைக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் எழுதியுள்ள கடிதத்தில், ‘தலைநகர் டெல்லியில் கடந்த 3 மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. நிலக்கரி விநியோகம் தடைபட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

இதேநிலை தொடர்ந்தால் டெல்லியில் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே இது விஷயத்தில் பிரதமர் தலையிட்டு போதுமான அளவு நிலக்கரி மற்றும் எரி எண்ணெய் கிடைக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via