முடிவுகள் உடனுக்குடன் வெளியிட  தேர்தல் ஆணையம் உத்தரவு

by Editor / 11-10-2021 06:20:23pm
 முடிவுகள் உடனுக்குடன் வெளியிட  தேர்தல் ஆணையம் உத்தரவு


ஒன்பது மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் (அக்.,12) காலை வெளியாக உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிகுமார் தெரிவித்தாவது: ஓட்டு எண்ணும் மையத்துக்கு வருவோர் உரிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும், பிறரை அனுமதிக்கக்கூடாது. ஓட்டு எண்ணும் மையத்துக்கு அலுவலர்கள் காலை 6.30 மணிக்குள் வர வேண்டும். ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சி.சி.டி.வி., கேமரா மற்றும் போதிய மேஜைகள் இருக்கிறதா?

என்பதை உறுதி செய்ய வேண்டும்.தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். அதோடு முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் இதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via