திருமணத்துக்கு முன்பான உடலுறவு குற்றமல்ல : அலகாபாத் நீதிமன்றம்

by Editor / 31-10-2021 02:47:14pm
திருமணத்துக்கு முன்பான உடலுறவு குற்றமல்ல : அலகாபாத் நீதிமன்றம்

 

திருமணமாகாத மைனர் பெண்ணுடன்  உறவுகொண்டால் குற்றம் மேஜர் பெண்ணுடன்  உறவுகொண்டால் அது ஒழுக்கமின்மை - அலகாபாத் உயர்நீதிமன்றம்  கருத்து தெரிவித்துள்ளது.
 
உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தன் காதலனை பார்க்கச் சென்ற 18 வயது நிரம்பாத பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்தில்  அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் காலை 8 மணிக்கு தையல் பயிற்சி முடிந்து தனது காதலனைச் சந்திக்கத் திட்டமிட்டுருந்தார். அதன்படி காதலன் ராஜூவின் பைக்கில் பயனித்த இருவரும் தனிமையான இடத்துக்குச் சென்றுள்ளனர்.

 காதலியிடம் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார் அந்த பெண் மறுக்கவே வலுக்கட்டாயமாகத் செய்துள்ளார். அப்போது  அங்கே வந்த வேறு இருவர் காதலனைத் தாக்கி  விட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
 அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
 
புகாரின்படி போக்ஸோ சட்டம் உட்பட பல பிரிவுகளில் குற்றவாளிகளின் மீது வழக்கு தொடுக்கப்பட்டு குற்றத்தைத் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபெண்ணின் காதலன்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
 வழக்கை விசாரித்த நீதிபதி, காதலனுக்கு இந்த வழக்கில் ஜாமீன் தர மறுத்துவிட்டார். மேலும் ஒரு காதலனாகத் தனது காதலியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் அவர் தவறிவிட்டார் என குற்றம் சாட்டினர்.

மேலும் திருமணமாகாத நிலையில் மைனர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் குற்றம் மேஜர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் அது ஒழுக்கமின்மை என நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.

மேலும் காதலனாக அவர் செய்த ஒரே காரியம் தன் காதலியை போலீசில் புகார் அளிக்க அழைத்து வந்தது மட்டும்தான் எனத் தனது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மைனர் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தில் காதலர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.

 

Tags :

Share via