புதுச்சேரி - தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு

by Admin / 12-11-2021 06:31:19pm
 புதுச்சேரி - தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு

 

தேர்தல் ஆணையர் வீட்டில் திருட்டு...  மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு...


 புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக இருப்பவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ராய் பி தாமஸ், இவர் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் கடந்த 29-ந் தேதி தனது குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான கேராளவுக்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு திரும்பினார்.

அப்போது அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது, இதனை கண்ட அவரும், அவரது குடும்பத்தாரும் அதிர்சசியடைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டினுள் பொருட்கள் அனைத்தும் நாலாபுறமும் சிதறிக் கிடந்துள்ளது.

மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க  நகைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது, இதனை அடுத்து தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த வருகின்றனர்

தொடர்ந்து  இந்த திருட்டு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நகைகள திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories