இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து பல பெண்களை மிரட்டிய நபர் கைது.

by Editor / 12-12-2021 01:11:49pm
இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து பல பெண்களை மிரட்டிய நபர் கைது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்த நியாஸ், தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பாக பழகி வந்துள்ளார். 

அந்த வகையில், திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக பழகி அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். பின்னர் அதனை ஆபாசமாக மார்பிங் செய்து மீண்டும் அந்த மாணவிக்கே அனுப்பி மிரட்டியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நியாஸை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றினர். நியாஸ் இதேபோன்று பல பெண்களை ஏமாற்றி மிரட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories