தமிழகத்தில் நடக்கும் அவலங்களுக்கு இரு கட்சிகளும் தான் பொறுப்பு-பிரேமலதா விஜயகாந்த்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துடன் இணைந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினார்.அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,நீட் தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை
தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கிறார்கள் ஆனால் அதை செயல்படுத்துவதில்லை
அரசின் செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு சான்று சென்னையில் தற்போது பெய்த கனமழை
எதிர்க்கட்சியாக இருக்கும் போது GO BACK MODI என்று திமுகவினர் முழங்கினர், தற்போது மத்திய அரசின் தயவு தேவை என்பதால் அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர், மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் -இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Tags :