மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிழந்தது.

by Editor / 12-02-2022 01:23:48pm
மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிழந்தது.

கோவை வரப்பாளையம் தனியார் தோட்டத்தில்  காட்டுயானை ஒன்று அந்தப் பகுதியில் உணவுக்காக வந்த நிலையில் மின்வேலியில் சிக்கி உயிழந்தது. இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அப்பகுதி மக்கள் யானை இறந்து கிடந்ததை பார்த்து வனச்சரகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வந்து பார்த்தபோது பிரதான மின் கம்பத்தில் இருந்து மின்சாரத்தை முறைகேடாக எடுத்தது தெரியவந்தது.
மேலும் விவசாய நிலத்திற்கு மின்வேலி அமைத்திருந்த நிலத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Tags : மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிழந்தது.

Share via

More stories

Logo