25 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் எரிந்து நாசம்

by Admin / 18-02-2022 12:35:26pm
 25 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் எரிந்து நாசம்

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே இரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள கடை எண் 4014-ன் கீழ் இயங்கிவரும் அரசு மதுபானக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

தீயின் தாக்கத்தின் காரணமாக பீர் மற்றும் குவாட்டர் பாட்டில்கள் வெடித்து மேலும் தீ பரவியதால் சுமார் 25லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் நாசமடைந்தன.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்புத்துறை வீரர்கள் கடையின் பூட்டை உடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
பழைய கட்டிடம் என்பதால் மின்கசிவு  காரணமாக தீப்பற்றியதா அல்லது நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17,18,19  ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மது அருந்த வழியில்லையே என ஆத்திரத்தில்  மர்மநபர்களால் கொளுத்தி விடப்பட்டதா என செங்கல்பட்டு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 
 

 

Tags :

Share via
Logo