10 ஆண்டுகளில் மூதாட்டிக்கு வீட்டு சிறை பசியால் மண்ணைத் தின்ற கொடுமை

by Staff / 15-04-2022 12:30:15pm
10 ஆண்டுகளில் மூதாட்டிக்கு வீட்டு சிறை பசியால் மண்ணைத் தின்ற கொடுமை

தஞ்சாவூரில் 10 ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டில் சிறை அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டியை சமூகநல துறையினர் மீட்டு உள்ளனர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு சிறையில் இருப்பதாக சமூகநல துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பார்த்தபோது மூதாட்டியின் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக காட்சியளித்தார் பசியின் கொடுமை தாங்க முடியாத அவர் கீழே கிடந்த மண்ணை எடுத்து சாப்பிட அவலம் நிகழ்ந்துள்ளது.இதுபற்றிய தகவல் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்ததும் அவர் அவரது உத்தரவின் பேரில் சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர் மூதாட்டியின் கணவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்பதும் மாதம் ஓய்வூதியம் 30 ஆயிரம் ரூபாய் பெற்று வருவதும் விசாரணையில் தெரியவந்தது. அவருடைய இரண்டு மகன்களில் மூத்த மகன் சென்னையில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் பட்டுக்கோட்டையில் வசிக்கும் இரண்டாவது மகன் தொலைக்காட்சியில் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. சகோதரர்கள் இருவருக்கும் இடையே இருந்த சொத்துப் பிரச்சனையில் பெற்ற தாயை 10 ஆண்டுகளுக்கு மேலாக கவனிக்காமல் உரிய பராமரிப்பு இன்றி வீட்டில் பூட்டி வைத்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற சமூகநலத்துறை குழுவினர் தமிழக பல்கலைக்கழக போலீசார் பாதுகாப்புடன் சென்று வீட்டு சிறையில் வைக்கப்பட்டு இருந்த ஞானஜோதி மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

Tags :

Share via