நாளை விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம், மே 4ல் துவங்கியது. அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் வெயிலின் உக்கிரம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. மற்ற நேரங்களில் வெயில் கொளுத்தியது. மே 26 சென்னை, கரூர் பரமத்தி உட்பட 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவதால், வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்.

Tags : Agni star bids farewell tomorrow