பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்

by Editor / 22-06-2022 04:57:41pm
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்


மன்னார் வளைகுடாவின் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் சிக்கியது 2000 கிலோ எடை வரை வளரக் கூடிய சூரிய மீன்கள் தென் அமெரிக்க நாடுகளில் ஒட்டிய கடல் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்குப் பின் பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய உள்ள சூரியனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதனை கேள்விப்பட்டு பாம்பன் துறைமுக வந்த கடல்சார் ஆராய்ச்சி யாளர்கள் பிடிபட்ட சூரிய மீன் 57 கிலோ எடை இருந்த தாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via