குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

by Admin / 20-09-2026 11:03:19pm
குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடை விதித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அருவிகளில் நீர் வரத்து கணிசமாக அதிகரித்து வருவதின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவி ஆகிய இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. மழைப்பொழிவு குறைந்து நீர் வரத்து சீரானதும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் குளிப்பதற்கு அனுமதி வழங்கும்.

குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
 

Tags :

Share via

More stories

Logo