நீட் தேர்வு நடத்தினால் போராட்டம் வெடிக்கும் - அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

by Editor / 06-06-2021 08:34:55am
நீட் தேர்வு நடத்தினால் போராட்டம்  வெடிக்கும் - அன்பில் மகேஷ் எச்சரிக்கை!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இருப்பினும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து அதற்கான அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ”மாணவர்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு தான். ஆனாலும் அந்த ஒருநாள் மூலம் மாணவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம்” என்றார்.

 

Tags :

Share via

More stories