அரசு மாநில கொள்கை வளர்ச்சிக் குழு பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு

by Editor / 25-08-2021 09:01:23pm
அரசு மாநில கொள்கை வளர்ச்சிக் குழு பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு

முதலமைச்சரின் கீழ் இயங்கும் மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 1971ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி கருணாநிதி அவர்களால் மாநில திட்டக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு முதலமைச்சரின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த குழு கடந்த 2020ஆம் ஆண்டில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைத்து துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்களை நியமித்தார். மற்றும் முழுநேர உறுப்பினராக பேராசிரியர் ராம.சீனுவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வரைவு திட்டம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர். தமிழகத்தில் வளர்ச்சிக்காக வளரும் வாய்ப்புகள், மகசூல் பெருக்கம், குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் எழில்மிகு மாநகரம், உயர்தர ஊரகக் கட்டமைப்பு, அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் போன்ற 7 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்குகளை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி கொள்கைகளை தயார் செய்ய மாநில வளர்ச்சிக் கொள்கைக்கு முதல்வர் உத்தரவிட்டார். தற்போது 7 இலக்குகள் அடிப்படையில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில், மாநில கொள்கை வளர்ச்சிக் குழு என்ற பெயர், தற்போது மாநில திட்ட ஆணையம் என மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via