கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல்

by Staff / 05-09-2025 05:46:38am
கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல்

தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகவதிபுரம் விளக்கு அருகே சார்பு ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ்  தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக புகையிலை பொருட்களை கடத்தி வந்த ஆலங்குளம் பூலாங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சூரன் மணி என்பவரின் மகன் மாதவன்(32) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக கடத்திவரப்பட்ட சுமார் 496 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது..

 

Tags : கேரளாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபர் கைது, 496 கிலோ புகையிலை பறிமுதல்

Share via