தச்சுத் தொழிலாளி சுடுகாட்டுப் பகுதியில் எரித்து கொலை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கரையடி சுடலைமாடன் கோயில் அருகே உள்ள
சுடுகாட்டு பகுதியில் ஒரு மனித உடல் எரிந்த நிலையில் கிடப்பதாக சாத்தான்குளம்
போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது எரிந்த நிலையில் கிடந்தது சாத்தான்குளத்தைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி கண்ணன் (55) என்பது தெரியவந்தது.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மேலும் கண்ணன் முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட காயம் உள்ளது.
மேலும் அவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து பின்னர் அங்கிருந்த முற்செடிகளை அவர் மீது போட்டு எரித்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தச்சுத் தொழிலாளி சுடுகாட்டுப் பகுதியில் கல்லால் தாக்கி, எரித்து கொலை
செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags :