கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வில் ஒன்பது அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு
தமிழக தொல்லியல் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகையில் 19 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு நான்கு உறைகிணறுகள் மற்றும் பானைகள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இதில் சரிந்த நிலையில் இருந்த உறைகிணறு பகுதியை அகழாய்வு செய்த போது கீழே 80 செ.மீ., விட்டமும், 20 செ.மீ., உயரமும் கொண்ட மேலும் ஒன்பது அடுக்குகள் வெளிப்பட்டன. எட்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த மிகப்பெரிய உறைகிணறு இதுதான். அகழாய்வு பணிகள் தொடர்கின்றன.
Tags :