காரைக்குடி அருகே கார் மோதி காவலர் பலி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா இவர் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.ராஜா தனது ஊரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு சக்கர வாகனத்தில் காவல் நிலைய பணிக்குச் சென்றார். அப்போது ஆவுடைப் பொய்கை என்ற இடத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, புதுக்கோட்டையிலிருந்து தேவகோட்டையை நோக்கிச் சென்ற கார் மோதியதில் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரை அதிவேகமாக ஓட்டிவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பலியான காவலர் ராஜாவு சாலை விபத்தில் காவலர் இறந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்

Tags :