ஆசிரமத்தில் கள் வீசி ரகளை செய்த இளைஞர்
தானே நகர் ராம்நகர் பகுதியில் ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தில் 63 வயது சாமியார் ஒருவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் போதையில் வந்த 35 வயது இளைஞர் ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதனை சாமியார் தட்டி கேட்டுள்ளார். அப்போது இளைஞர் வைத்திருந்த கத்தியால் சாமியாரை தாக்கினார். பின்னர் ஆசிரமத்தின் மீது சரமாரியாக கற்களை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் சாமியார் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனைத்தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Tags :