கேரளாவில் இருந்து கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.

by Staff / 29-10-2022 12:38:38pm
கேரளாவில் இருந்து  கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரி பாட் பகுதியில் செயல்பட்டு வரும் 2 பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 1, 500 வாத்துகள் இறந்தன. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் கொல்லப்பட்டன. மேலும் நோய் தொற்று மனிதர்களுக்கு பரவாத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான படந்தாலுமூடு சோதனை சாவடியில் தமிழக கால் நடை பராமரிப்பு துறையினர் கேரளாவில் இருந்து கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கால்நடைகளை கொண்டு சென்று விட்டு திரும்பி வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குமரி மாவட்டத்தினுள் அனுமதிக்கின்றனர். இதில் டாக்டர் முருகேசன், சந்திர சேகர், எட்வர்ட் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via