சர்தார் பட வெற்றியால் இயக்குனருக்கு கார் பரிசு
கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வசூலில் வெற்றி பெற்றுள்ள படம் சர்தார்.இந்தப்படத்தின் வெற்றியால்படத்தயாரிப்பாளர் லட்சுமணகுமார் டொயோட்டோ பர்னிச்சூனர் காரை நடிகர் கார்த்திகையால் இயக்குனர் பி.எஸ்.மித்ரனுக்கு வழங்கினார்.இந்தாண்டில் கார்த்தி நடித்த மூன்று படங்களான விருமன்,பொன்னியின் செல்வன்,சர்தார் வசூலில் சாதனை செய்தது.இதனால்,அவரது சம்பளமும் அதிகரித்துள்ளதாக தகவல்.சமீபகாலமாக, படவெற்றி
பெற்றால் இயக்குனர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படுவது அதிகரித்துள்ளதால் ,புதிய இயக்குனர்கள் நல்ல கதையைதேர்ந்தெடுத்து இயக்க ஆர்வமாக உள்ளனர்.கமல் லோகேஷ்கனகராஜிற்கும்,ஐசரிகணேசன் சிம்புவிற்கும் தற்பொழுதுமித்ரனுக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :