மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மரணம்

சேலம் உடையாப்பட்டி அடுத்த அதிகாரிப்பட்டி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் வலசையூர் மின்சார வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி ( 40) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி தங்கராஜ் மது போதையில் ஏதோ ஒரு விஷக்காயை தின்றதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கிய தங்கராஜை அம்மாபேட்டை பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தங்கராஜ் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :