விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுத்தம்

by Staff / 01-12-2022 11:14:16am
விமான நிலையங்களில் 5ஜி சேவை நிறுத்தம்


மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவைகள் விரிவடைவதைக் கருத்தில் கொண்டு, விமான நிலையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அதிர்வெண் கொண்ட 5ஜி சேவைகளை நிறுத்துமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
டி.ஜி.சி.ஓ.வின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 3.3-3.6 GHz திறன் கொண்ட 5G நெட்வொர்க் சேவைகளை விமான நிலையங்களில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவு வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo