கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் விற்பனை
கோவை மாவட்டம் பெரியகடை வீதி காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கோமதி, இவருக்கு நேற்று உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் சட்டவிரதமாக கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு சென்று சோதனை மேற்கொண்ட பொழுது, அங்கு, கரும்பு கடையை சேர்ந்த 25 வயதான சபிக் என்கின்ற கிளி என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா கலந்த மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவரிடம் இருந்து 45 மாத்திரைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :