தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஹிந்தியில் பதில்

by Editor / 26-06-2021 06:57:15pm
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஹிந்தியில் பதில்

 

மத்திய அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்ட கேள்விகளை இணையதளத்தில் கேட்கலாம் . ஆங்கிலத்தில் கேள்வி கேட்கும்போது ஆங்கிலத்திலும் , இந்தியில் கேள்வி கேட்கும்போது இந்தியிலும் பதில் அளிப்பது தான் நடைமுறை .
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் சில தகவல்களைக் கோரியிருந்தார். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறித்த தகவல்களை அவர் கேட்டிருந்தார். இந்தக் கடிதத்தை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு பகிர்ந்த மத்திய அரசு, விண்ணப்பதாரருக்கு பதிலளிக்கும்படி பணித்திருந்தது. அதன்படி டெல்லியில் இருந்து தகவல்களை அனுப்பிய ஒரு மருத்துவமனை, இந்தியில் பதில் அனுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் பதில் அளிக்காமல் இந்தியில் தகவல்களை அளித்திருப்பது சர்ச்சையை மேலும் தென்காசியை சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் ஆர்டிஐ மூலம் ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு வட மாநில அதிகாரிகள் இந்தியில் பதிலளித்தது இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் சம்பந்தமாக பல்வேறு தகவல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடம் கோரியிருந்த போது ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பல மருத்துவமனைகள் ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தன.ஆனால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனை மட்டும் இந்தியில் பதில் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via