சென்னை ஏரிகளின் நீர்வரத்து நிலவரம்.

by Editor / 04-12-2022 07:57:24am
சென்னை ஏரிகளின் நீர்வரத்து நிலவரம்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் பூண்டி சோழவரம் கண்ணண்கோட்டை ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 8.டி எம் சி யில் தற்போது 5.898 மில்லியன் கன அடியில் இருந்து 6 டி எம்.சி யை நெருங்குகிறது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 534 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு நேற்று 46 கன அடி நீர்வரத்து வந்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 36 கன அடியாக குறைந்துள்ளது.

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவான 3,231 மில்லியன் கண்ணாடியில் தற்போது 2435மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு  625 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3300 மில்லியன் கன அடியில் தற்போது 2436 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது இந்த நிலையில் இந்த ஏரிக்கு நேற்று 93 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 83 கன அடியாக குறைந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo