.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் நூற்றாண்டு வாயில் கல்வெட்டை திறந்து வைத்தாா்
பேராசிரியர் க.அன்பழகன் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பிராகவும் இரண்டு முறை கல்வி அமைச்சராகவும் மக்கள்நல்வாழ்வுதுறை அமைச்சராகவும் இருந்தவர்.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்.40 க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.இனமான பேராசிரியர் என்று அழைக்கப்படும் பேராசியரின் நூற்றாண்டை நினைவு கூறும்விதமாக பள்ளிக்கல்வி துறை வளாகமான டி.பி.ஐ.வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் எனப்பெயர் மாற்றப்பட்டுள்ளது.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் பேராசியர் அன்பழகனார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்ததோடு டி.பி.ஐ வளாக நுழைவு வாயில்அருகே வைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.அமைச்சர் க.துரைமுருகன்,எ.வ.வேலு,அன்பில் மகேஷ் பொய்யா மொழி,பொன்முடி,உதயநிதி ஆகியோர் பங்கேற்பு.
Tags :