கரும்பு கொள்முதல் முறைகேடுகளை தடுத்திடுக - சீமான்

by Staff / 09-01-2023 02:33:54pm
கரும்பு கொள்முதல் முறைகேடுகளை தடுத்திடுக - சீமான்

தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பிற்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டுக் கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய்வரை மட்டுமே அரசு வழங்குவது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். ஆளுங்கட்சியினரின் தலையீட்டினாலேயே கரும்பிற்கான விலை குறைத்து வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo