திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் புகார்  தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு.

by Editor / 24-07-2021 04:31:53pm
திருச்சி பேராசிரியர் மீதான பாலியல் புகார்  தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பு.

 


பிஷ்ப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சந்திரமோகன் வகுப்பறையில் தங்களுக்கு மிக நெருக்கமாக வந்து அமர்ந்துகொண்டு இரட்டை அர்த்தத்தில் கொச்சையாக பேசுவதாகவும், சில்மிஷம் உள்ளிட்ட பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் , உச்சகட்டமாக `சட்டையை பேண்ட்டை தளர்த்திக்கொண்டு அவர் செய்த சேட்டைகளை பார்த்து தலையை குனிந்துகொண்டே நாங்கள் வகுப்பறையில் இருந்தோம்’ என்றும் முதல்வரிடம் அளித்த புகாரில் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் தெரிவித்துள்ளனர். 


மேலும், அவர் வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால் தன் அறைக்கு மாணவிகளை வரச்சொல்லி கட்டாயப்படுத்துவதும், அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் நளினி மாணவிகளைப் பார்த்து `எச்.ஓ.டியை பார்க்க போகும் நேரத்தில் முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும்’ என வலியுறுத்தியதாகவும், இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து வெளியேற விரும்புவதாகவும் புகாரில் தெரிவித்திருந்தனர்.


இந்தப்புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான, கல்லூரியின் துணை முதல்வர் அழகப்ப மோசஸ், கம்ப்யூட்டர் துறை தலைவர் சத்தியசீலன், பேராசிரியை வயலட் ஆகியோர் அடங்கிய குழு புகார் கொடுக்கப்பட்ட தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையையும் கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்தனர்.


விசாரணைக்குழு (விசாகா கமிட்டி), ஏப்ரல் மாத இறுதியில் கல்லூரி நிர்வாகத்திற்கு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், பேராசிரியர் பால் சந்திரமோகன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று தெரிய வந்தது. உதவி பேராசிரியை நளினி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்த விசாரணை குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழ்த்துறைத் தலைவர் பால் சந்திர மோகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த நிலையில் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியை நளினி ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்ணடுமென வலியுறுத்தி அகில இந்திய இந்து மகாசபா திருச்சி மாவட்ட தலைவர்  மணிகண்டன், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.இந்த நிலையில்  திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 

 

Tags :

Share via