திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டா வாலிபர்
தூத்துக்குடியில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (31), கூலி வேலை செய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக தனக்கு திருமண நடக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஐயப்பன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :