ஆவின் பண்ணையில் அமைச்சர் திடீர் ஆய்வு.

by Staff / 26-02-2023 03:11:17pm
 ஆவின் பண்ணையில் அமைச்சர் திடீர் ஆய்வு.

மதுரை அண்ணாநகர் பகுதியில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.இங்கிலாந்து நகரில் பல்வேறு பகுதிகளுக்கும் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது கடந்த சில நாட்களாக முறையாக நேரத்திற்கு பால் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் இதனால் மக்களும் பால் முகவர்களும் பெரிதும் பாதிப்படைந்தனர்.இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்கு 1. 60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1. 35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளதால் பணியில் பாதிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டது.இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மற்றும் மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோர் இருந்தனர்

 

Tags :

Share via