புதுச்சேரி கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி.

புதுச்சேரி: காட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(46). டெய்லர். இவரது மனைவி சசி(40). ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மூத்தமகன் புஷ்பராஜ்(17). கல்லூரியில் படித்து வந்தார். இளையமகன் கிஷோர்ராஜன்(16). 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சுந்தர்ராஜ் அண்ணன் ராஜா(50). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் ஷோபன்ராஜ்(19). பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கடற்கரைக்கு சென்றனர். அனைவரும் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வள்ளுவர்மேடு பிக் பீச் கடற்கரை பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, எழுந்த ராட்சத அலையில் சிக்கி புஷ்பராஜ், கிஷோர்ராஜன், ஷோபன்ராஜ் ஆகியோர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அலையில் சிக்கி தாய் கண்முன்னே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags :